சாதிபற்றி இழிவாக பேசிய மீராமிதுன் - அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்...
மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். மேலும், நடிகர் சூர்யா, விஜய்,ஜோதிகா, திரிஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அதோடு, தமிழ் சினிமா நடிகைகள் தன்னை பின்பற்றி போட்டோஷூட் நடத்துவதாக தொடர்ந்து கூறி வருகிறார்.
சமீபத்தில், தலித் சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள்தான் என்னை அதிகம் காப்பி அடிக்கின்றனர். அவர்களை திரையுலகில் இருந்தே துரத்த வேண்டும் என்று அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். எனவே, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே, கைது செய்யப்பட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.