சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் அவரின் 65வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. இப்படத்திற்கு பீஸ்ட் (Beast) என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப் பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ? Master, Bigil,படங்களை தொடர்ந்து Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா?’ என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. தற்போது தலைப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதற்குள் அரசியல் கட்சிகள் பிரச்சனையை துவங்கிவிட்டன. விஜய் திரைப்படங்கள் என்றாலே அரசியல் கட்சிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவிப்பது தொடர் கதையாகி விட்டது.
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…