எம்.ஜி.ஆர் நடிப்பில் பொன்னியின் செல்வன் – முதல் பாடல் வெளியீடு !

Published on: January 18, 2020
---Advertisement---

22d87f97f02f0c701950d11de230455e

எம்.ஜி.ஆரை அனிமேஷனாக வரைந்து உருவாக்கப்பட்டுள்ள வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ எனும் அனிமேஷன் படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் நீண்டகாலமாக முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. இதனையடுத்து இப்போது மணிரத்னம் அந்த முயற்சியில் வெற்றி கண்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் தோற்றத்தையும் அனிமேஷனில் உருவாக்கி பொன்னியின் செல்வன் அனிமேஷன் படத்த உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் பாடல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. பெரியார் குத்து பாடல் புகழ் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment