மணிரத்னம் படப்பிடிப்புக்கு கட்டையை போட்ட கொரோனா…. ஒருவழியா சீக்கிரம் முடிங்கப்பா!…

இயக்குனர் மணிரத்னம் தற்போது பலரும் தொட தயங்கிய மற்றும் எடுக்க முடியாமல் போன ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து லைகா நிறுவனமும் தயாரித்து வருகிறது.

பாகுபலியை போல் இப்படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, அமலாபால் என பெரிய நடிகர், நடிகையர் பட்டாளமே நடித்து வருகிறது.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த படம் துவங்கி ஒன்றரை வருடம் ஆகியும் இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.  துவக்கத்தில் ஒரு போஸ்டர் மட்டும் வெளியானது.

சமீபத்தில் இப்படம் தொடர்பாக ஒரு அசத்தலான போஸ்டரை லைக்கா நிறுவனம் தற்போது வெளியிட்டது. முதல் போஸ்டரில் கத்தி மட்டும் இடம் பெற்றிருந்தது. இந்த புதிய போஸ்டரில் கத்தியோடு சேர்ந்து கேடயமும் இடம் பெற்றுள்ளது. PS-1 என குறிப்பிடப்பட்டிருப்பதால் இது முதல் பாகத்தின் போஸ்டர் என கருத வேண்டியுள்ளது.

இந்நிலையில், திடீரென படப்பிடிப்பு குழுவில் 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ந்து போன படக்குழுவினர்கள் அவர்களை வெளியே அனுப்பிவிட்ட பின்பே படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படக்குழுவினருக்கு அவ்வப்போது கொரோனா சோதனை செய்த பின்னரே படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram