
இயக்குனர் மணிரத்னம் தற்போது பலரும் தொட தயங்கிய மற்றும் எடுக்க முடியாமல் போன ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து லைகா நிறுவனமும் தயாரித்து வருகிறது.
பாகுபலியை போல் இப்படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, அமலாபால் என பெரிய நடிகர், நடிகையர் பட்டாளமே நடித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வந்தது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசம் மாநிலம் ஒரிசாவில் நடக்கவுள்ளது. அதோடு, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. இந்த படம் துவங்கி ஒன்றரை வருடம் ஆகியும் இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. துவக்கத்தில் ஒரு போஸ்டர் மட்டும் வெளியானது. அதன்பின் கடந்த மாதம் ஒரு போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜுக்கு அடிபட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்நிலையில், விமான நிலையத்தில் மணிரத்னம், பிரகாஷ்ராஜ், கார்த்தி ஆகியோர் நிற்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.