More

தளபதி 65 படத்துக்காக ஜார்ஜியா கிளம்பிய பூஜா ஹெக்டே – வைரல் வீடியோ

மாஸ்டர் படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹேக்டே நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் தற்போதைக்கு தளபதி 65 என அழைக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்காக விஜய் நேற்று இரவே ஜார்ஜியா கிளம்பி சென்றுவிட்டார். அதேபோல், பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா நாட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு தொடர்ச்சியாக 16 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

பூஜா ஹெக்டே விமானநிலையத்தில் ஜார்ஜியாவுக்கு புறப்படும் வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

 

Published by
adminram

Recent Posts