More

நீங்க நினைக்குற மாதிரிலாம் ஒண்ணுமில்லை… சர்ச்சையால் பதறிய தளபதி 65 நாயகி

மாஸ்டர் படத்தின் பெருவெற்றிக்குப் பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் இன்று பூஜையோடு தொடங்கியது. 

Advertising
Advertising

இதில், விஜய், இயக்குனர் நெல்சன், தயாரிப்பு தரப்பு, நடிகர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். பூஜை படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தசூழலில் பூஜையில் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கலந்துகொள்ளாதது சர்ச்சையானது. 

இதுபற்றி பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பவே, தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டே ரொம்பவே பதறிவிட்டாராம். உடனடியாக இதுகுறித்து விளக்கம் கொடுத்த பூஜா, `நான் இன்னொரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததால் தளபதி 65 பூஜையில் கலந்துகொள்ளவில்லை. வேறு ஒரு பிரச்சனையும் இல்லை. படக்குழுவோடு இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்’ என்று அவர் கூறியிருக்கிறார்.

Published by
adminram

Recent Posts