விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் 65 ஆவது படத்தை முருகதாஸ் இயக்க இருப்பதும், அதற்கு தமன் இசையமைக்க இருப்பதும் உறுதியாகியிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக அந்த படத்தைத் தொடங்குவதில் சில சிக்கல்கள் எழுந்தன. இந்நிலையில் படத்தைத் தயாரிக்க இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படத்தின் பட்ஜெட்டை பெருமளவு குறைக்க சொல்லி சன் பிக்சர்ஸ் நிறுவனம் வற்புறுத்தவே இழுபறியான சூழல் உருவானது.
முதலில் அதற்கு தயங்கிய விஜய்யும் முருகதாஸும் இப்போது நிலைமையை புரிந்துகொண்டு அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். 130 கோடி ரூபாய் என சன் பிக்சர்ஸ் சொன்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்க முருகதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் தர்பார் படத்துக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய அவர், இப்போது இந்த படத்துக்கு பாதிக்கு மேல் சம்பளத்தைக் குறைத்து கொண்டுள்ளாராம். சன் பிக்சர்ஸ் விஜய்யின் சம்பளம் 70 கோடி போக 60 கோடியை முருகதாஸிடம் கொடுத்து பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து தர சொல்லியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…