நடிகர் சூர்யா அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பதும் இந்த அறக்கட்டளை மூலம் படிக்க வசதியில்லாத ஏழை மாணவ மாணவிகள் பலர் உயர்ந்த படிப்புகள் படித்து தற்போது நல்ல நிலையில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் சென்னை தி நகரில் வித்தியாசம் தான் அழகு , உலகம் பிறந்தது நமக்காக என்ற இரண்டு புத்தகங்களை வெளியிடும் விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பல முக்கிய விஐபிகள் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் ஏழை மாணவி ஒருவர் அகரம் அறக்கட்டளை மூலமாக படித்து முன்னேறி தற்போது ஒரு நல்ல வேலையில் இருப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி சிறு வயதில் பட்ட கஷ்டங்கள், தனது குடும்ப சூழ்நிலை, வறுமையால் மேற்பட்ட பல அனுபவங்கள் ஆகியவற்றை நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் பேசப்பேச மேடையில் இருந்த ஒவ்வொருவரும் கண்கலங்கினார். குறிப்பாக நடிகர் சூர்யா அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
அந்த மாணவியை தனது நிகழ்ச்சியான பேச்சை முடித்தவுடன் மேடையில் இருந்து எழுந்து வந்த சூர்யா அந்த மாணவியை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறியதோடு, நீ நல்ல நிலைக்கு வந்ததும், உன்னை போல் கஷ்டப்படும் மாணவ மாணவிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். புத்தக வெளியீட்டு விழாவாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியான நிகழ்ச்சி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…