ரஜினி நடிக்கும் ஒரே ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என பிரபல இயக்குனர்களே காத்திருக்கும் நிலையில் ரஜினியே அழைப்பு விடுத்தும் அவரது படத்தை இயக்க மறுத்த பிரபல நடிகர் ஒருவர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
மலையாளத்தில் பிரபல நடிகராகவும், தமிழில் பாரிஜாதம், சத்தம் போடாதே உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகர் பிரித்விராஜ். இவர் கடந்த ஆண்டு வெளியான மோகன்லால் நடித்த லூசிஃபர் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் கேரளாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது
இந்த நிலையில் லூசிஃபர் ரிலீசான ஒரு சில வாரங்களில் ரஜினி, பிரித்விராஜை அழைத்து ஒரு கதை கேட்டு அந்த கதை பிடித்துவிட்டதால் அந்த படத்தில் நடிக்க முடிவு செய்தார். ஆனால் ரஜினி தனது முடிவை கூற மூன்று வாரங்கள் டைம் எடுத்து கொண்டதாகவும், ரஜினியிடம் இருந்து எந்தவித தகவலும் வராததால் வேறு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், ஒப்பந்தம் செய்தபின்னர் ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்ததால் ரஜினி படத்தை இயக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் நேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் பிரித்விராஜ் கூறினார்.
ரஜினியை அழைப்பு விடுத்தும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்திலிருந்து விலக முடியாது என்று கூறிய அவரது நல்ல உள்ளத்தை புரிந்து கொண்ட ரஜினி பின்னொரு சந்தர்ப்பத்தில் நாம் இருவரும் இணைவோம் என்று ஆறுதல் கூறினாராம். இருப்பினும் பிருத்விராஜின் மனம் சமாதானம் அடையாமல் ஒரு நீண்ட மன்னிப்பு கடிதத்தை ரஜினிக்கு எழுதியுள்ளார். இந்த தகவலையும் பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…