பிரபல நடிகை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலகினர் போராட்டம் செய்து வரும் நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, போராட்டம் செய்பவர்கள் மற்றும் இந்த சட்டம் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தவறான தகவல்களை ஒரு சிலர் பரப்பி வருவதாகவும் இது குறித்த போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும் நடிகை ஜெயலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
1960களில் தமிழ்நாட்டு…
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…