அஜித்தின் ‘வலிமை’யில் இணையும் பிரபல ஹீரோ!

Published on: January 18, 2020
---Advertisement---

6ca5b22e46fb64629eff879252e2b940

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சமீபத்தில் முடிவடைந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல ஹீரோ ஒருவரை இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அஜீத் ஜோடியாக யாமி கவுதம் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ரசிகர் ஒருவர் பிரசன்னாவிடம் டுவிட்டரில் ஒருவர் கேள்வி கேட்க, ’வலிமை’ படக்குழுவினர் தன்னை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் என்றும் இருப்பினும் அந்த தகவல் உறுதி செய்யும் வரை பொறுமை காக்க வேண்டும் பதில் கூறியுள்ளார். எனவே ’வலிமை’ படத்தில் பிரசன்னா நடிக்க இருப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது 

போலீஸ் கேரக்டரில் அஜித் நடிக்கும் அதிரடி ஆக்சன் படமான ’வலிமை’ படத்தில் அஜீத் மூன்று வித கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக வெளிநாட்டிலிருந்து மேக்கப்மேன்கள் வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மோட்டார் ரேசிங், கார் சேஸிங் உள்பட ஆங்கில படத்துக்கு இணையாக இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் உருவாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment