
மதுரையில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது செய்துள்ளனர்.
தமிழக காவல்துறை ஆபாசப் படங்களை இணையத்தில் இருந்து பதிவிறக்குபவர்கள் மற்றும் பதிவேற்றுபவர்களின் பட்டியலை தயாரித்துள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்துள்ளதாகவும் சொல்லி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியது. அதன்படி சிலரைக் கைது செய்தும் உள்ளது.
இந்நிலையில் இப்போது சிறுமிகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியதாக மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரைக் கைது செய்துள்ளனர். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் அளித்த தகவலின் படி அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ கைது செய்துள்ளனர்.





