ஆபாசமாக பேசிய இயக்குனர் – சரியான பாடம் புகட்டிய நடிகைகள்!

Published on: February 5, 2020
---Advertisement---

b66a9874e5e28ac6558bce6a50ec1ef5

நீராவி பாண்டியன் என்ற சின்னத்திரை இயக்குனர் மைக்கில் துணை நடிகைகளை ஆபாசமாகத் திட்டியதை அடுத்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியலை இயக்கி வருபவர் நீராவி பாண்டியன் எனும் இயக்குனர். இந்த சீரியலுக்காக திருமணம் ஒன்றைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார் இயக்குனர். அப்போது மைக்கில் துணை நடிகைகளை ஆபாசமாக அவர் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து 15க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் அங்கிருந்து வெளியேறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் வந்து இயக்குனரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் போலீஸார் விசாரணையில் திருப்தி அடையாத அந்த துணை நடிகைகள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இயக்குனர் தங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என கூறினர். இதையடுத்து இயக்குனர் மைக்கில் துணை நடிகைகளை மன்னிப்புக் கேட்டதை அடுத்து பிரச்சனை முடிந்தது. இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

இயக்குனர், துணை நடிகை, ஆபாசம், director, supporting actress, abusive words

Director talk abusive words to actresses

Leave a Comment