">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொரோனாவால் வீட்டில் வறுமை… குப்பைலாரி முன் விழுந்து தற்கொலை : சென்னையில் அதிர்ச்சி
வீட்டின் வறுமை காரணமாக குடும்ப தலைவர் ஒருவர் குப்பை லாரி முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு வலியுறுத்தி இருப்பதால் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் தினக்கூலிக்கு வேலை செய்யும் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூர் பகுதியில் வசித்து வருபவர் பக்ரூதீன்(54). இவரது குடும்பம் கடந்த சில நாட்களாக வறுமையில் வாடியுள்ளது. எனவே,குடும்பத்தில் தகராறு ஏற்பட, நேற்று முன் தினம் தி.நகரில் இருக்கும் தன் நண்பர்கள் சிலரிடம் பணம் கேட்பதற்காக பக்ரூதின் நடந்தே சென்றுள்ளார்.
அதன்பின், தி. நகர் வி.என் சாலை, தெற்கு போக் சாலை சந்திப்பில் நின்றிருந்த பக்ருதீன் அந்த வழியாக வந்த குப்பை லாரி முன் திடீர்ன பாய்ந்தார். இதில் வண்டியின் டயர் ஏறி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
போலீசார் அவரது உடலை சோதனை செய்த போது ஒரு கடிதம் இருந்தது. அதில், கையில் பணம் இல்லாததால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.