தொடர்ந்து டோலிவுட்டை தூக்கி நிறுத்தும் பிரபாஸ்!.. அடுத்த பட ரிலீஸ் எப்போ தெரியுமா?..
பாலிவுட் பெரும் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் தொடர்ந்து ஹேட்ரிக் வெற்றியை கொடுத்து நடிகர் ஷாருக் கான் ஹிந்தி சினிமாவை மீட்டார். அதே வேலையை தற்போது தெலுங்கில் பிரபாஸ் தொடர்ந்து செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு வெளியான சலார் திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில் சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் 1100 கோடி ரூபாய் வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் பெற்ற 1100 கோடி ரூபாய் வசூலை ஒரு மாதத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் முந்தியுள்ளது.
இந்நிலையில், பிரபாஸ் அடுத்து ஸ்ப்ரிட் படத்தில் நடிக்கப் போகிறாரா? சலார் 2 படமா? கல்கி 2வா? என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் அதிரடியாக மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி படமான ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 10ம் தேதி 2025ம் ஆண்டு அந்த படம் வெளியாகும் என தற்போது சூப்பரான அறிமுக வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் அந்த தேதியில் வராது என்கின்றனர். அடுத்த ஆண்டு சம்மருக்கும் 1000 கோடி வசூலை பிரபாஸ் அள்ளிக்கொடுக்க காத்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருவதாக கூறுகின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..