ராஜமவுலிக்கு நோ சொன்ன பிரபாஸ்.. ஓகே என்று க்ரீன் சிக்னல் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

by adminram |

f319de50e1a1596655a23bca5fffb057

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஸ்கா, சத்யராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் பாகுபலி. மிகுந்த பொருட் செலவில் உருவாகியிருந்த இப்படத்தை இரண்டு பாகமாக எடுத்தார் ராஜமவுலி.

பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் இயக்குனர் ராஜமவுலி. இதற்கு முன்னர் இவர் இயக்கிய அனைத்து படங்களின் வெற்றி பெற்றிருந்தாலும், மிகவும் பிரமாண்டமாக உருவாகியிருந்த பாகுபலி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிபெறத்தது.

முதல் பாகத்தை கொண்டாடிய ரசிகர்கள், அதைவிட இருமடங்கு அதிகமாக அதன் இரண்டாம் பாகத்தை கொண்டாடினார்கள். அந்த அளவிற்கு அற்புதமாக அதன் திரைக்கதையை அமைத்து இருந்தார். இந்தப்படத்தின் மூலம் பிரபாஸ், மற்றும் ராணாவும் செம ரீச்.

2b07ad83c20dadc306ffbe6bbb2ee959

இப்படத்தை அடுத்து ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து "RRR" படத்தை இயக்கி முடித்துள்ளார் ராஜமவுலி. இப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு (2022 ஜனவரி) திரைக்கு வர உள்ளது. ஆனால் அதே நாளில்தான் பிரபாஸ் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' படமும் திரைக்கு வர உள்ளது.

இதையடுத்து 'ராதே ஷ்யாம்' படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்குமாறு பிரபாஸுக்கு வேண்டுகோள் வைத்தாராம் ராஜமவுலி. ஆனால், ராதே ஷ்யாம் ஏற்கனவே நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்ததால் தள்ளி வைக்க வாய்ப்பில்லை என தயாரிப்பாளர் கை விரித்துவிட்டதாக கூறினாராம் பிரபாஸ்.

7d69ccd261d83daafae383f4176642d4
magesh babu

சங்கராந்திக்குத்தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள சர்க்கார் வாரி பட்டா படமும் வெளியாக உள்ளது. ஆனால், ராஜமவுலியின் கோரிக்கையை ஏற்று படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளாராம் மகேஷ் பாபு. மகேஷ் பாபு அடுத்ததாக ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story