என் மகன்தான் ஹீரோ!.. ஹிட் கொடுத்த இயக்குனருக்கு இந்த நிலமையா?....
மைனா திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் பிரபு சாலமன். இப்படம்தான் அமலாபாலை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில்தான் நடிகர் விக்ரமின் மகனும், சிவாஜியின் பேரனுமான விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த டி இமானின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து செம ஹிட் ஆனது. இப்படத்தில்தான் ;லட்சுமி மேனனும் அறிமுகமானார்.
அதன்பின், கயல், தொடரி, காடன் என அவர் இயக்கிய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. எனவே, அவருக்கு கால்ஷீட் கொடுக்க முன்னணி நடிகர்கள் முன்வரவில்லை. எனவே, பொறுத்து பொறுத்து பார்த்து வெறுத்துப்போன பிரபு சாலமன் கடைசியாக தனது மகனையே ஹீரோவாக்க முடிவு செய்துவிட்டாரம். விரைவில் இப்படம் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.