துப்பாக்கியால் சுட சொன்னவர்களை துடைப்பத்தால் அடித்து விரட்டியுள்ளனர் – பிரகாஷ் ராஜ் காரசார டிவிட்!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பதை அடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் காரசாரமான டிவிட்டைப் போட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் ஆளும் மத்திய அரசைக் கடந்த சில வருடங்களாக கடுமையாக எதிர்த்து வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பெங்களூர் தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட டெல்லி சட்டபேரவை தேர்தல் முடிவுகளில் பாஜக அடி வாங்கியிருப்பது குறித்து அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டில் ‘ போராடிய மக்களை (குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக) துப்பாக்கியை விட்டு சுடச் சொன்னவர்களை இப்போது மக்கள் துடைப்பத்தால் (ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்) அடித்து விரட்டி இருக்கிறார்கள்.’ எனப் பதிவிட்டுள்ளார். இந்த டிவிட்டால் இப்போது சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதம் எழுந்துள்ளது.

Published by
adminram