ரீவைண்ட்-பட்டைய கிளப்பிய பிரசாந்தின் தமிழ் திரைப்படம்

by adminram |

f45c167f1cbc5010ec5a3d7d73634217-3

நடிகர் பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்கள் 90களில் ஹிட் ஆகின.90களின் இறுதியில் பிரசாந்த் நடித்த கண்ணெதிரே தோன்றினாள் படம் வந்தது இந்த படம் நல்ல ஹிட் ஆனது . அதற்கு பிறகு பிரசாந்த் ஜோடி, ஸ்டார், பார்த்தேன் ரசித்தேன் என நிறைய படங்களில் நடித்தாலும் எல்லாம் சுமாரான வெற்றிப்படமாகவே அமைந்தது.

இந்த நேரத்தில் பிரசாந்துக்கு அதிரடி திருப்புமுனையாக அமைந்த படம்தான் தமிழ். இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் வந்த முதல் படம் இது. ஹரியின் படங்களில் எல்லாம் ஒரு ஸ்பீடு இருக்கும். இப்படியும் விறு விறுவென படம் இயக்க முடியுமா என அனைவரையும் இப்படத்தின் மூலம் ரசிக்க வைத்தார் ஹரி.

1adf91638feb5497186ec30c9bc16458

இந்த படம் ரிலீஸ் ஆன அதே நாளில்தான் விக்ரம் நடிக்க சரண் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் ஜெமினி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. ஜெமினி படத்தில் ஓ போடு என்ற பாடல் ஹிட்டால் அந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தாறுமாறாக இருந்தது தொடர்ந்து பரபரப்பும் இருந்தது.

பிரசாந்தின் தமிழ் படமும், விக்ரமின் ஜெமினி படமும் இரண்டும் ஒரே நாளில் வெளிவந்தது. 2002ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டுக்காக 2002 ஏப்ரல் 14ல் இப்படம் வெளியானது.

ஆரம்பத்தில் விக்ரமின் தொடர் வெற்றிகள், ஏவிஎம் நிறுவனம், பிரமாண்டம், ஓ போடு பாடல் உள்ளிட்ட நிகழ்வுகளால் அனைவரும் ஜெமினியை அதிகம் எதிர்பார்த்தனர் ஜெமினி படத்துக்கே கூட்டம் அதிகம் சென்றது. ஜெமினி படம் சென்றவர்களுக்கு எதிர்பார்த்த அளவு கதையில்லையே ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங் என்றே நினைத்தனர். கலாபவன் மணியின் வித்யாசமான ஆக்டிங்கும் ஓ போடு என்ற ஒற்றைப்பாடலுமே படத்தை தூக்கி பிடித்தது. மற்றபடி வழக்கமான கதைதான் ஜெமினி படத்தின் கதை.

முதலில் தமிழ் படம் ஓடிய தியேட்டர்களில் பெரிய கூட்டம் இல்லை. ஆனால் ஜெமினியை விட தமிழ் படம் நன்றாக இருக்கிறது என தகவல்கள் தொடர்ந்து வந்ததால் ஜெமினிக்கு இருந்த கூட்டம் குறைந்து தமிழ் படம் ஓடிய தியேட்டர்களில் திருவிழா கூட்டமாகியது.

ஹரியின் வித்யாசமான அதிரடியை அதுவரை பார்க்காத ரசிகர்கள் தமிழ் படத்தை சீட்டின் நுனிக்கே சென்று ரசித்து பார்த்தனர். அவ்வளவு விறுவிறுப்பாக இப்படம் இருந்தது.

வேலை தேடும் இளைஞன் ஒருவன் தேவையில்லாமல் ரவுடிகளிடம் எதிர்த்து நின்ற ஒரு காரணத்துக்காக அவர் குடும்பம் பழிவாங்கப்படுகிறது. அதனால் வெகுண்டெழும் கதாநாயகன் அதிரடியாய் வில்லன்களை அழிப்பதுதான் கதை.

கதையை காட்சிப்படுத்திய விதம்தான் புதிது . அதுவரை அப்படி ஒரு திரைக்கதையில் எந்த ஒரு திரைப்படமும் வரவில்லை. இன்று வரை ஹரி ஸ்டைல் பார்முலா என்று அது ஆகிவிட்டது. சேஸிங் காட்சிகள் எதுவும் இல்லாமல் ஹரியின் படம் இருக்காது இப்படத்தில் அதற்கு குறைவில்லை.பிரசாந்த் அதிரடி இளைஞனாக நன்றாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். பிரசாந்த் சிம்ரன் கூட்டணி படம் எல்லாம் வெற்றிதான் என்ற கூட்டணி இந்த படத்திலும் நிரூபணம் ஆகியது. மனோரமா, வடிவேலு, ஊர்வசி, நாசர், ஆசிஸ் வித்யார்த்தி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

ஜெமினி படத்தை இயக்கியவர் சரண். சரணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் ஹரி. சரணின் ஜெமினி படத்தின் கதை அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை விட அவரது சிஷ்யர் ஹரிதான்தனது முதல் படமாக தமிழ் படத்தை இயக்கி சிக்ஸர் அடித்தார்.

ஜெமினி , தமிழ் இரண்டு படத்துக்கும் இசை பரத்வாஜ்.

தமிழ் படத்தில் எல்லா பாடல்களுமே நன்றாக வந்திருந்தன. கண்ணுக்குள்ளே காதலா என்ற உன்னிமேனன் பாடிய பாடலும் காதலெனும் ஜோரில என்ற ஹரிஸ் ராகவேந்திரா பாடிய பாடலும் , திக்குதே திக்குதே போன்ற பாடல்கள்செம ஹிட் அடித்தன.

மற்ற பாடல்களும் ஓரளவு பேசப்பட்டது.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் வரிகளை போல எல்லோரும் அதிக வெற்றி பெறும் என்று நினைத்தது விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தைதான். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழ் வருடபிறப்புக்கு வெளியான படத்தில் செம ஹிட் அடித்தது பிரசாந்தின் தமிழ் படம்தான் என்றால் மிகையில்லை .

Next Story