வீட்டிலிருந்து அரசியல் பண்ணா வேஸ்ட்! வெளியா வா தம்பி!.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன பிரபலம்..

vijay tvk
Vijay TVK: சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். கடந்த சில வருடங்களாகவே தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் அரசியலுக்கு வருவது பற்றி பேசி வந்தார். கோட் படம் துவங்குவதற்கு முன் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கினார்.
அதன்பின் விழுப்புரம் விக்கிரவாண்டியில் கட்சி மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் விஜயின் ரசிகர்கள் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டனர். விஜயின் மாநாட்டில் அவ்வளவு பேர் கலந்துகொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக் கழகம்: இந்த மாநாட்டில் விஜய் மிகவும் ஆவேசமாக பேசினார். குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். நான் முடிவெடுத்துதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். பின் வாங்க மாட்டேன். என் கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்திருக்கிறேன். கூட்டணி வரும் கட்சிகளுக்கு அரசியலில் பங்கு’ என்றெல்லாம் பேசினார்.
பனையூர் அரசியல்: மாநாட்டில் விஜய் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியது. ஆனால், மழை வெள்ளம் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டபோது எல்லா அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் சொன்னபோது விஜய் மட்டும் அங்கு போகவில்லை. மேலும், அந்த ஊர் மக்களில் சிலரை தனது பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண பொருட்களை கொடுத்தார்.
அரசியல் கட்சி துவங்கிய பின்னரும் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் பேசவில்லை. இப்படி பனையூரில் இருந்துமட்டுமே அவர் அரசியல் செய்து வருகிறார். இந்நிலையில், விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பிரேமலதா விஜயகாந்த் சில அறிவுரைகளை சொல்லியிருக்கிறார்.
பிரேமலதா: விஜய் எங்கள் வீட்டு பையன். அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்ந்தவர் கேப்டன்தான். ஆனால், சினிமா வேறு, அரசியல் வேறு, விஜய் முதலில் 4க்கு 4 அறையில் இருந்து அரசியல் செய்யாமல் வெளியே வந்து மக்களை சந்திக்க வேண்டும். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். மக்களின் பிரச்சனைகள் பற்றி பேசவேண்டும். அப்போதுதான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும். இதை நான் விஜயிடமே சொல்லியிருக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார்.