80 வயது கிழவியை சமாளிக்க முடியாமல் திணறும் பிரேம்ஜி அமரன்!

Published On: December 21, 2019
---Advertisement---

7ee5f0dc5835fd75a5d2062c9104bcf5

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக பிரேம்ஜி அமரன் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கிய சுரேஷ் என்பவர் இயக்கி வரும் இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமிய பின்னணியை கொண்ட திரைப்படமாக அமைந்து வருகிறது

இந்த படத்தில் பிரேம்ஜி அமரன் கிராமத்து இளைஞனாக நடித்து வருகிறார். அவருக்கு தற்செயலாக ஒரு விபரீதம் நடக்கிறது, அந்த விபரீதத்தால் அந்த கிராமத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் கிராமங்களில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களில் எப்படி செயல்படுகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சிதான் இந்த படம் என்றும் இயக்குனர் சுரேஷ் கூறியுள்ளார் 

இந்த நிலையில் இந்த படத்தில் மாயாக்கா என்ற 80 வயது முதிய பெண் வில்லி வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும், அவரை சமாளிக்க முடியாமல் பிரேம்ஜி படும் பாடுதான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரு சில படங்களில் சில காட்சிகள் மட்டும் நடித்திருந்தாலும் இந்த படத்தில் மாயாக்காவுக்க்கு முக்கிய வேடம் என்றும் பாதி படத்தில் அவர்தான் தோன்றுவார் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார் 

சுவாயம் சித்தா என்ற வெப்சீரிஸ் நடிகை பிரேம்ஜி அமரனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ரேஷ்மா இந்த படத்தில் மற்றொரு கேரக்டரில் நடிக்க உள்ளார். அந்தோணிதாசன் இசையில் சரண் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment