அச்சு அசல் தனுஷை போல் தோற்றம் கொண்ட டிக்டாக் இளைஞருக்கு படவாய்ப்பு!

Published on: July 27, 2020
---Advertisement---

0108303a20ec09a3a9b0c21ac8e23933-1

கமல் , விஜய் , நயன்தாரா என பல பிரபலங்களின் தீவிர ரசிகர்கள் சிலர் டிக் டாக் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பெரும் பேமஸ் ஆகினர். அந்த லிஸ்டில் தற்ப்போது அச்சு அசல் தனுஷை உரித்து வைத்தது போல் உடல் தோற்றம், உடை அணியும் ஸ்டைல், கெட்டப் என தனுஷை போலவே இருக்கும்  நெல்லை செல்லா என்ற என்ற இளைஞர் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் மட்டும் இன்ஸ்டாகிராமில் சுமார்  100க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும்,  இவருக்கு 2019ம் ஆண்டின் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த தோற்றம் கொண்ட டிக்டாக் பிரபலத்திற்கான  விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐடி ஊழியரான செல்ல அந்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக தனுஷ் தோற்றத்தில் பல வீடியோக்கள் வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் பிரபலமானார். இதையடுத்து இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ஒப்பந்தமாகியிருக்கிறார். லாக்டவுன் முடிந்ததும் அந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது. உங்கள் திரைப்பயணம் தொடர வாழ்த்துக்கள் செல்லா…

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment