பால் விலையை மீண்டும் உயர்த்தும் தனியார் நிறுவனங்கள் – பாதிக்கும் பொதுமக்கள் !

பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் அரசு நிறுவனமான ஆவின் தவிர, ஆரோக்யா, ஹெரிட்டேஜ் போன்ற பல நிறுவனங்கள் பால் விநியோகம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டுதான் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தியது. அப்போதே தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்திக் கொண்டன.

இந்நிலையில் இப்போது மீண்டும் பால் விற்பனை விலையை அதிகமாக்க உள்ளன. ஆரோக்யா, ஹெரிட்டேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் வரும் 20 ஆம் தேதி முதல் பால்விலை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் மேலும் பாதிப்படைய உள்ளனர்.

Published by
adminram