
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் நடைபெறவில்லை. எனவே, பல பெற்றோர்கள் போன வருடமே தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு செல்லாமல் அரசு பள்ளியில் சேர்த்துவிட்டனர். இந்த வருடம் கொரோனா 3வது அலை அக்டோபரில் துவங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளதால் அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் பள்ளி மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் (TC) இல்லாமல் அரசு பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பள்ளிக்கல்வி துறை ஆணையரிடம் அனு அளித்துள்ளது.





