பக்தி பழம் போல் கொழுக்கட்டையுடன் விநாயகருக்கு வாழ்த்து கூறிய பிரியா பவானி ஷங்கர்!

செய்தி வாசிப்பாளனியான நடிகை பிரியா பவானி ஷங்கர் கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடம் மிகவும் பிரபலமடைந்தார். அதையடுத்து படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. 

மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் , மாஃபியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரின் கைவசம் இந்தியன் 2 , ருத்ரன் உள்ளிட்ட படங்கள் உள்ளது. இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கொழுக்கட்டை சாப்பிட்டுக்கொண்டே விநாயகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்!

Published by
adminram