எப்புடி பார்த்தாலும் அழகா இருக்கீங்களே... மேக்கப் போடாத புகைப்படம் வெளியிட்ட ஹோம்லி நடிகை!
தமிழ் சினிமாவில் கிளாமர் காட்டாமல் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பானியாக மீடியா உலகில் நுழைந்தார்.
அதன் மூலம் பிரபலமாகிய அவர் பின்னர் சீரியல்களில் நடிக்க துவங்கினார். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருக்கும் போதே திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு அவரை தேடி வந்தது.
அதையடுத்து மேயாத மான் படத்தில் ஹோம்லியான கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் ஒரு ஹீரோயின் என்பதை கூட யோசிக்காமல் துளி கூட மேக்கப் போடாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் வர்ணனையில் மூழ்கியுள்ளார்.