வடிவேலுக்கு ஜோடியான பிரியா பவானி ஷங்கர்? – அவரே வெளியிட்ட புகைப்படம் வைரம்!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் வைகைப்புயல் வடிவேலு ஏகப்பட்ட ரசிகர்களுக்கு சொந்தக்காரர். அவர் 23ம் புலிகேசி படத்தின் போது அப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போடப்பட்டது. 

Also Read

இதனால் கடந்த 4 ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த வடிவேலு பிரச்னையெல்லாம் தீர்ந்த பின்னர் தற்போது ரீ என்ட்ரி கொடுக்க வருகிறார். ஆம், நாய் சேகர் என்னும் புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுக்கிறார். 

இந்நிலையில் இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்க இருப்பதாக புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளது. வடிவேலுவும் பிரியா பவானியின் ஒன்றாக அமர்ந்திருக்கும் அந்த புகைப்படத்தை பிரியா பவானி ஷங்கர் வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் இருவரும் நாய் சேகர் படத்தில் ஜோடியாக நடிப்பதாக தவறாக புரிந்துகொண்டனர். ஆனால், உண்மையில் அது fan made புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Published by
adminram