வேட்டி கட்டியிருந்தால் பிரியாணி இலவசம் – சென்னையில் அதிரடி சலுகை

ஜனவரி 6ம் தேதி (நாளை) உலக வேட்டிகள் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வகையில் வேட்டி கட்டி வரும் முதல் 50 பேருக்கு பிரியாணி இலவசம் என சென்னையில் செயல்படும் ‘தொப்பி வாப்பா’ பிரியாணி கடை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கைத்தறி வேட்டி இலசம் எனவும் அறிவித்துள்ளது. அதோடு, நாளை ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் எனவும் அதிரடி அறிவிப்பை அந்த கடை அறிவித்துள்ளது.

இந்த பிரியாணி கடை சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரி, அண்ணா நகர், பெரும்பாக்கம், சேலையூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram