More

திருமணம் செய்ய வற்புறுத்திய தயாரிப்பாளர் … மறுத்த நடிகை – கத்தியால் குத்தி கொடூரம்!

பிரபல பாலிவுட் நடிகை மால்வி மல்ஹோத்ரா என்பவர்  தயாரிப்பாளர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.

Advertising
Advertising

கடந்த ஆண்டு இந்தியில் உருவான உடான் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மால்வி மல்ஹோத்ரா. அந்த தொடருக்கு பின் மால்விக்கு பாலிவுட் படங்களில் இப்போது வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இவரிடம் சமூகவலைதளங்களின் மூலம் பழக்கமான் குமார் மஹிபால் சிங் என்கிற தயாரிப்பாளர் அவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் மால்வி மறுக்கவே தொடர்ந்து வற்புறுத்தியதால் சமூகவலைதளத்தில் அவரை பிளாக் செய்துள்ளார். இதனால் கோபமான மஹிபால் காரில் சென்ற மால்வியை வழிமறித்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால் கோபமாக மால்வி மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தியால் மூன்ரு முறை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மால்வி இப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts