More

மச்சானை வச்சு படமெடுக்கும் ஹரி… பட்ஜெட்டைக் கேட்டு ஓடும் தயாரிப்பாளர்கள்!

சூர்யாவுக்காக தயார் செய்து வைத்திருந்த அருவா கதையை லேசாக மாற்றி மச்சான் அருண் விஜய்யை வைத்து எடுக்க உள்ளார் இயக்குனர் ஹரி.

Advertising
Advertising

சில மாதங்களுக்கு ஆரவாரமாக அறிவிக்கப்பட்டது இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அருவா திரைப்படம். ஆனால் இடையில் என்ன ஆனதோ அந்த கதையில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் இத்தனை நாளாக தான் கண்டுகொள்ளாமல் இருந்த மச்சான் அருண் விஜய் பக்கம் திரும்பினார் ஹரி. அவரும் சம்மதம் சொல்ல படத்தின் பட்ஜெட் போடப்பட்டது.

அதில் இருவரும் தங்கள் சம்பளத்தோடு சேர்த்து படத்தின் பட்ஜெட் 23 கோடி ரூபாய் என முடிவு செய்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகை போட்டு அந்த படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் அஞ்சுவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரின் மார்க்கெட்டுக்கு ஏற்ப  படத்துக்காக 12 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே செலவிட முடியும் கருதுவதால் அதற்கு மேல் செலவு செய்தால் கையைக் கடிக்கும் என தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் ஏ எம் ரத்னம் இந்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram