சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைக்கா நிறுவனம், தயாரித்துள்ள ’தர்பார்’ படம், வரும், 9 ம் தேதி. வெளியாகவுள்ளது. இந்த படத்தின் சென்சார் பணி உள்பட ரிலீசுக்கு தேவையான அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டது
இந்த நிலையில் இந்த படத்திற்கு தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில் மலேசியாவைச் சேர்ந்த, 'டி.எம்.ஒய்., கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவில் லைகா தயாரித்த 2.௦ படத்தை மலேஷியாவில் திரையிடவும், வினியோகிக்கவும், லைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாகவும், இதற்காக, 20 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், படம் வெளியாக தாமதம் ஏற்பட்டதால், தாமதத்துக்கு வட்டி தருவதாக லைகா தெரிவித்ததாகவும், இதையடுத்து, 2.0 படத் தயாரிப்புக்காக, கூடுதலாக, 12 கோடி ரூபாய் வழங்கியதாகவும், எனவே கூடுதலாக வாங்கிய, 12 கோடி ரூபாய் மற்றும் 2019 நவம்பர் வரையிலான வட்டியை சேர்த்து, 23.70 கோடி ரூபாய் வர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது
எனவே, 23.70 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளிக்கும்படி, லைக்கா நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதுவரை தர்பார் படத்தை வெளியிட, லைக்கா நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது
இந்த மனு மிதான விசாரணை சமீபத்தில் நடந்தபோது இந்த மனுவுக்கு பதில் அளிக்க, லைக்கா நிறுவனம் சார்பில், அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது லைகா நிறுவனம் சார்பில் பதில் மனு வழங்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சென்னை ஐகோர்ட் அறிவித்தது. மேலும் தர்பார் படத்திற்கு தடை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி தர்பார் படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…