Home News Reviews Throwback Television Gallery Gossips

தடைகளை தாண்டி வரும் சைக்கோ… ஜனவரி 24 முதல் உலகமெங்கும்…

Published on: December 23, 2019
---Advertisement---

343dabec214e405e16561cafe96d8b8e

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் கண்பார்வை இல்லாத இசைக்கலைஞராகவும், மரணமடைந்த தனது காதலிக்காக பலி வாங்குபவராகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அருண்மொழி மாணிக்கம் இப்படத்தை தயாரித்துள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் டிசம்பர் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இப்படம் 2020ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

06783f9d23a520722126de1c5e2b996b

இப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் எனவும், இருக்கையின் நுனியில் அமர்ந்து ரசிக்க வைக்கும் திரில்லராக இருக்கும் எனவும் இப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்ற ‘உன்ன நினைச்சு நினைச்சு’ பாடல் வெளியாகி பலரையும் கலங்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment