More

சைக்கோ திரை விமர்சனம்

தொடர்ச்சியாக பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ வில்லனை பார்வையில்லாத மாற்றுத் திறனாளியான உதயநிதி ஸ்டாலின் தனது புத்திசாலித்தனத்தால் எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை 

Advertising
Advertising

கண் தெரியாத மாற்றுத்திறனாளியான உதயநிதி ஸ்டாலின் எப்.எம் வானொலியில் பணிபுரியும் அதிதிராவ் ஹைத்ரியை காதலிக்கின்றார். தன்னுடைய காதலை அவர் அதிதியிடம் சொல்லும்போது அதனை நிராகரித்து அவரை திட்டி அனுப்புகிறாள் அதிதி. ஒருநாள் நாளை எப்எம் கேள் அதில் நான் ஒரு ஹிண்ட் கொடுக்கின்றேன். அதை வைத்து நீ சரியாக என்னை கண்டுபிடித்து நான் இருக்கும் இடம் வந்தால் உன்னை காதலிக்கிறேன் என்று உதயநிதியிடம் அதிதி கூறுகிறார்

அதேபோல் அந்த இடத்தை சரியாக உதயநிதி கண்டுபிடித்து சொல்லும்போதுதான் அதிதியை சைக்கோ கொலைகாரன் கடத்துகிறான். தன்னுடைய காதலியை கடத்திய வில்லனை நித்யாமேனன் உதவியுடன் உதயநிதி எப்படி கண்டுபிடித்தார்? எப்படி மீட்டார் என்பதுதான் இந்த படத்தின் கதை 

கண் தெரியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்திருக்கும் பாத்திரத்திற்கு உதயநிதி கச்சிதமாக பொருந்துகிறார். கையில் ஸ்டிக்குடன் காதலியை அவர் கண்டுபிடிக்க போராடுவதை மிக அழகாக தனது முகத்தில் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் அதிகமான கேரக்டர்கள் இருந்தாலும் உதயநிதி தன்னுடைய கேரக்டரை மக்கள் மனதில் பதிவு செய்யும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியது அற்புதம்

உதயநிதியின் காதலியாக அதிதி ராவ் இதுவரை நடித்த கேரக்டரில் இதுதான் பெஸ்ட் என்று சொல்லும்படி உள்ளது. முதலில் உதயநிதியை திட்டுவது, பின்பு அவரது காதலின் உண்மை தன்மையை அறிந்து அவரை ஏற்றுக் கொள்வது, பிறகு சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொண்டு தவிப்பது என இந்த படம் அதிதிக்கு ஒரு சிறப்பான படமாக அமைந்திருக்கிறது. நித்யாமேனன் கேரக்டர் குறைந்த அளவு இருந்தாலும் அவர் தன்னுடைய கேரக்டரை தனது அனுபவ நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் 

சைக்கோ கொலைகாரனாக நடித்திருக்கும் வில்லன் ராஜ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு அசத்தலான வில்லன் என்பது இந்த படத்தின் மூலம் உறுதியாகிறது. எந்தவித பயமும் இல்லாமல் அடுத்தடுத்து கொலை செய்வது, கொலை செய்த உடன் தலைகளை துண்டித்து அதை அடுக்கி வைப்பது என உண்மையாகவே ஒரு சைக்கோ எப்படி இருப்பார் என்பது போலவே அவர் நடித்திருக்கிறார்

போலீஸ் அதிகாரியாக ராம், உதயநிதியின் உதவியாளராக வரும் சிங்கம்புலி, நித்யா மேனனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகினி உள்பட பலர் இந்த படத்தில் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை மிக அற்புதமாக செய்துள்ளனர். படத்தின் மிகப்பெரிய பலம் என்று கூறினால் அது இளையராஜாவின் பின்னணி இசை தான். ஒரு சில இடங்களில் பின்னணி இசையே இல்லாமல் அப்படியே மௌனமாக விட்டிருப்பதுதான் இளையராஜாவின் ஸ்பெஷல் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மிக அபாரமாக இருப்பதால் படத்தின் விறுவிறுப்பு ஆரம்பம் முதல் கடைசிவரை கொஞ்சம் கூட குறையவில்லை. இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்க்கும் அளவுக்கு படம் இல்லை என்பதும் மிக அதிகமான வன்முறை உள்ளது என்பதும் மைனஸாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் மிஷ்கினின் விறுவிறுப்பான திரைக்கதை, இளையராஜாவின் அசத்தலான பின்னணி இசை, உதயநிதியின் அற்புதமான நடிப்பு ஆகியவற்றுக்காக சைக்கோவை ஆக்சன் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்

ரேட்டிங்: 4/5

Published by
adminram

Recent Posts

  • Cinema News
  • latest news

சாய்பல்லவி கூட SK நடிப்பதில் சிக்கல்… பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

சிவகார்த்திகேயனைப் பொருத்த…

21 minutes ago