More

முதல்வருக்கு நன்றி… ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசை பெற்று செல்லும் பொதுமக்கள் நெகிழ்ச்சி…

கடந்த ஆண்டு கொரோனா வைரல் பரவல் காரணத்தால் நாடே பாதிக்கப்படது. பொதுமுடக்கத்தில் பலரும் வேலை இழந்தனர். பலராலும் தொழில்களை நடத்த முடியவில்லை. பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் தமிழகத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி, பருப்பு , எண்ணெய் ஆகியவற்றை 6 மாதங்கள் இலவமாக கொடுத்தது.

Advertising
Advertising

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.2500 ரொக்கம் மற்றும் சிறப்பு பரிசு பொருட்களாக அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழு கரும்பு ஆகியவற்ற ரேஷன் கடையில் கொடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் காலை முதலே மக்கள் காத்திருந்து, வரிசையில் நின்று பொங்கல் தொகுப்பையும், பணத்தையும் வாங்கி சென்றனர். ஒரே நேரத்தில் எல்லோரும் வந்தால் தள்ளுமுள்ளு, இடையூறு மற்றும் நெருக்கடி ஏற்படும் என்பதால் தேதி வாரியாக பிரித்து ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டுவிட்டதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.  

நிதிநெருக்கடி காலத்திலும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இந்த பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என கருதியே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.2500 மற்றும் பரிசு பொருட்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே, இதை வாங்கி செல்லும் பொதுமக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் வாங்கிக் கொள்ளலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது.

Published by
adminram

Recent Posts