More

நிர்பயா வழக்கில் தண்டனை நிறைவேற்றம் – நிர்பயாவின் தாயார் சொன்னது என்ன ?

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertising
Advertising

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்பயாவை ஓடும்பேருந்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டது நாடங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலை 6 பேர் கொண்ட கும்பல் செய்தது. அதில் ஒரு மைனர் சிறுவன் இருந்தது நாட்டையே உலுக்கியது. இதையடுத்து அந்த வழக்கில் கைது செய்ய பட்ட குற்றவாளிகளில் தற்போது சிறையில் இருந்த அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகியபேருக்கும் இன்று காலை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

6 பேர் கொண்ட கும்பலில் மைனர் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மற்றொரு குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டே தண்டனை அறிவிக்கப்பட்டாலும் பல வழிகளில் குற்றவாளிகளின் வழக்கறிஞர் தண்டனையை தாமதப்படுத்திக் கொண்டே வந்தார்.

பல முறை தள்ளி வைக்கப்பட்ட பின் இன்று காலை அவர்கள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை திகார் சிறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து பேசிய நிர்பயாவின் தாயார் ‘இது நிர்பயாவுக்கு மட்டும் கிடைத்த நீதி அல்ல… எல்லா பெண்களுக்கும் கிடைத்தது’ என சொல்லியுள்ளார்.

Published by
adminram

Recent Posts