புன்னகையே சிறு பூங்கிளியே... "கா.பெ.ரணசிங்கம்" பாடல் ரிலீஸ்!

b2eed9360d95fb74d9394731b5970c30

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தின் எல்லாப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

படத்தின் டிரைலர் வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றது. திரையரங்குகள் திறப்பது எப்போது எனத் தெரியாத நிலையில் இந்த படத்தை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸில் விற்க தயாரிப்பு தரப்பு சில மாதங்களாக முயற்சி செய்து வந்தது.

அதன்படி தற்ப்போது ஓடிடி மற்றும் டிடிஎச் சிலும் இப்படம் வெளியாக உள்ளது. அக்டோபர் 2 அன்று ஜீ ப்ளெக்ஸ் சேனல் மூலமாக ஒளிபரப்பப்படவும், ஜீ5 தளத்தில் பார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "புன்னகையே" என்ற லிரிகள் பாடல் வீடியோவை படத்தின் ப்ரோமோஷனாக படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles
Next Story
Share it