புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணவில்லை – காவல்நிலையத்தில் புகார்

நாட்டுப்புற பாடல் புகழ் தம்பதி புஷ்பவனம் குப்புசாமி – அனிதா ஆகியோரின் மகள் பல்லவி. இவர் மருத்துவம் படித்து வருகிறார். குப்புசாமி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், குப்புசாமியின் உறவினர் கவுசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் ‘ பல்லவிக்கும் அவரின் சகோதரிக்கும் நேற்று இரவு சண்டை நடந்தது. அப்போது கோபமடைந்த பல்லவரி காரை எடுத்துக்கொண்டு சென்றார். ஆனால், அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

எனவே, போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
adminram