கத்தார் செல்லும் வெற்றிமாறன் & சூரி– விசாவுக்காக பரபரக்கும் படக்குழு !

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கத்தாரில் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அசுரன் வெற்றிக்குப் பின் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இந்த படத்தை ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. முதலில் ந முத்துக்குமாரின் கவிதை ஒன்றை அடியொற்றி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது வெளிநாடு வாழ் தமிழர்களின் துன்ப வாழ்வை சொல்லிய அஜ்னபி என்ற நாவலைதான் வெற்றிமாறன் படமாக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நாவலை எழுத்தாளர் மீரான் மைதீன் எழுதியுள்ளார். இதனால் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளிலேயே நடக்க இருக்கிறது.

தமிழர்கள் அதிகளவில் வேலைபார்க்கும் அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் படப்பிடிப்பை நடத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார். இதற்கான விசா ஏற்பாடுகளை இப்போது தயாரிப்பு நிறுவனம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram