மாஸ்டர் ஆடியோ விழாவில் தரமான சம்பவம் இருக்கு: பிரபல இயக்குனரின் டுவீட்

Published on: February 6, 2020
---Advertisement---

d93ca02f98f6fb92a1ec1089579bee52

தளபதி விஜய் வீட்டில் நேற்றும் இன்றும் நடைபெற்ற வருமான வரி சோதனையில் எந்தவிதமான கருப்பு பணமும் அவரது வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இதுகுறித்து ’மாஸ்டர்’ ஆடியோ விழாவில் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஆடை பட இயக்குனரும் மாஸ்டர் படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவருமான இயக்குனர் ரத்னகுமார் இதுகுறித்து தனது டுவிட்டரில் ’மாஸ்டர்’ ஆடியோ விழாவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் 

இதற்கு பதிலளித்துள்ள விஜய் ரசிகர்கள் ’மாஸ்டர் ஆடியோ விழாவில் தரமான சம்பவம் இருக்கின்றது’ என்றும் ’தர்மமும் நியாயமும் நிச்சயம் ஜெயிக்கும் ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்’ என்றும் ’நாங்கள் அனைவரும் மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் என்றும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் 

ஏற்கனவே விஜய்யை பயமுறுத்த தான் இந்த வருமான வரி சோதனை என சீமான் உள்ளிட்ட ஒரு சிலர் கூறி வரும் நிலையில் விஜய் இது குறித்து ஒரு அதிரடியான மாஸ்டர் ஆடியோ விழாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment