முதல் 3 நாட்களில் இந்தியளவில் ராயன் செய்த வசூல் சாதனை!.. சந்தீப் கிஷன் தான் எல்லாத்துக்கும் காரணம்!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களை அந்த படம் திரையரங்குகளில் மகிழ்வித்து வருவதாகவே கூறுகின்றனர். ஒரு பக்கம் ராயன் படத்தின் வசூல் உருட்டு என்று கூறப்பட்டாலும், முதல் 3 நாட்கள் நல்ல ஓப்பனிங்கை அந்த படம் பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.
திங்கட்கிழமை ஆன இன்று முதல் ராயன் படம் ஓடினால் தான் வெற்றிப் படமாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை நான் நேற்று சில திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆகாமல் இருந்த நிலையிலும், ராயன் படத்துக்கு 14 கோடி ரூபாய் வசூல் இந்திய அளவில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராயன் படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த சந்தீப் கிஷனின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட வருகிறது. ஆரம்பத்தில் பீர் பாட்டிலை எதிராளியின் தலையில் அடித்து வம்பிழுக்கும் சந்தீப் கிஷன் தனது ஜோடியான அபர்ணா பாலமுரளியுடன் ஆடிப்பாடி ரொமான்ஸ் செய்யும் காட்சிகள், மீண்டும் பாரில் துரையின் மகனை குடி போதையில் தெரியாமல் ஏழரை இழுக்கும் காட்சிகள் என கதற விட்டுள்ளார்.
அதுபோல கிளைமாக்ஸுக்கு முன்பாக தனது அண்ணன் தனுஷை குத்தும் காட்சியிலும், கிளைமேக்ஸ் காட்சியில் தனுஷுடன் சண்டை போடும் காட்சி என படம் முழுக்க காளிதாஸ் ஜெயராமை விட இவருக்கு தான் அதிக முக்கியத்துவத்தை தனுஷ் கொடுத்துள்ளார்.
கேப்டன் மில்லர் படத்திலும் சந்தீப் கிஷனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதே போல ராயன் படத்திலும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் நல்ல நட்பு உள்ளது தெரிகிறது.
ராயன் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் இந்திய அளவில் 42 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. உலகளவில் 50 முதல் 55 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்கின்றனர்.