தனுஷோட பெரிய மனசு இருக்கே... அதுக்கு அந்த ஒரு சீன் போதும்...! ராயன்ல இப்படி 'டச்' பண்ணிட்டாரே..!

ராயன் படத்தைப் பொருத்தவரை 'கேப்டன் ஆப் த ஷிப்' தனுஷ் தான். அவர் படத்துக்காக சில காட்சிகளை விட்டுக்கொடுத்தது தான் முக்கியம். எப்பவுமே பெரிய ஹீரோ அவர் தான் இயக்குகிறார் என்றால் எல்லா இடங்களிலும் அவர் தான் இருப்பார். ஏன்னா அவர் தான் டைரக்டர். அவர் தான் ஹீரோ. மற்றவங்களுக்கு அந்த ஸ்பேஸைக் கொடுக்கவே மாட்டாரு. இந்தப் படத்துல தனுஷோட ஓபனிங் சீன்.

அதுவும் தனுஷ் மாதிரி மிகச்சிறந்த நடிகன் ஆக்ஷன் படம் பண்றாருன்னா ஓபனிங் சீன் எப்படி இருக்கணும்? பல படங்களில் நாம பார்த்திருப்போம். கதாநாயகியை வில்லங்க விரட்டிட்டு வருவாங்க. அந்தக் கதாநாயகியின் பேரழகிற்கும் விரட்டிட்டு வர்ற நாதாரி பயலுக முகத்திற்கும் சம்பந்தமே இருக்காது. முடிவெட்டியே 300 வருஷம் ஆகி இருக்கும்.

அப்படித்தான் ஒவ்வொருத்தனும் இருப்பான். விரட்டிட்டு வரும்போது அப்படியே வந்து ஒரு மதில் சுவரை ஒரு கால் உதைக்கும். உதைச்சா சுவர் எல்லாம் புட்டுக்கிட்டு விழும். அந்த சுவரோட, கற்களோட சேர்ந்து 20 பேர் வந்து விழுவான். அப்படி காலை மட்டும் மெதுவா வெளியே வைப்பாரு. மெல்ல மெல்ல டாப் ஆங்கிளுக்குப் போனா அப்படித்தான் ஹீரோ முகத்தைக் காட்டுவாங்க.

ஆனா இந்தப் படத்துல தனுஷூக்கு அப்படித்தான் ஒரு ஓபனிங் இருக்குன்னு பார்த்தா ஏதோ ஒரு சட்டியில என்னத்தையோ போட்டு வதக்கிக்கிட்டு இருக்காரு. ஆனா அவரு செய்ய வேண்டிய பில்டப்பை தன்னோட தம்பியா நடிச்சிருக்கிற சந்தீப் கிஷனுக்குக் கொடுத்துருக்காரு. அவருக்கு ஒரு பைட் காட்சி ஒரு பார்ல நடக்கும்.

அந்த பைட் எக்ஸ்ட்ராடினரியா பண்ணிருக்காரு. பெரிய கைதட்டல் விழும்னு தனுஷூக்கும் தெரியும். அப்படின்னா பெருந்தன்மையா தனுஷ் அந்த சீனை அவருக்குக் கொடுக்கிறாரு. அங்க தான் படமும் நிக்குது. கதை தான் முக்கியம். அந்தக் காட்சியில அவரு அடிச்சா தான் படம் நகரும்கறதனால தனுஷ் அப்படி காட்சி அமைச்சிருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it