தனுஷின் 50வது படம்... கெத்துக்காட்டியதா ராயன்...? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ..!
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கின்றார். தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறிய தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகின்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்கின்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து தன்னுடைய 50வது திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்தும் இருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, தனுஷ், செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கின்றார். மேலும் சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் எப்படி இருக்கின்றது என்பது தொடர்பாக ட்விட்டரில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதனை நாம் இதில் பார்ப்போம்.
சிறுவயதில் தனது பெற்றோரை இழந்து தவிக்கும் அண்ணனான தனுஷ் தனது தம்பிகளான சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம், தங்கை துஷாரா விஜயன் ஆகியோரை வளர்த்து வருகின்றார். வடசென்னையில் வசித்து வரும் தனுசுக்கு எதிரிகளால் சில பிரச்சனை ஏற்படுகின்றது. அவரின் குடும்பத்தை காப்பாற்ற எதிரிகளைத் தேடிப் பிடித்து கொலை செய்கின்றார் ராயன் என்கின்ற தனுஷ்.
முதல் பாதி வெறித்தனமாக இருக்கின்றது. இரண்டாம் பாதி வெறித்தனத்தின் உச்சம், இன்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் அனல் பறக்கின்றது. தனுஷ் மற்றும் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு அபாரமாக இருக்கிறது என twitterரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ஏ ஆர் ரகுமானின் இசை இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றது.
வெற்றிமாறன் ஸ்டைலில் தனுஷின் ராயன் திரைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். ஒரு சீன் கூட போர் அடிக்கல, இன்டெர்வல் சீன் வெறித்தனமாக இருந்தது. பிளாக்பஸ்டர் ஹிட் என்று ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.