ராயன் ரம்பல் செம ரகளையா இருக்கே!.. தனுஷ் சம்பவத்தை விட பெரிய பாய் சம்பவம் பெருசா இருக்கே!..

by Saranya M |   ( Updated:2024-07-17 12:22:13  )
rayan
X

rayan

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ராயன் ரம்பல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகி வரும் ராயன் திரைப்படத்தில் தனுஷ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தனுஷின் ஐம்பதாவது படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட் பாடல்களை தொடர்ந்து தற்போது ராயன் ரம்பல் பாடல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கேங்ஸ்டர் படமாக ராயன் படத்தை தனுஷ் இயக்கியுள்ளார்.

இந்த மாதம் ஜூலை 26 ஆம் தேதி ராயல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நிச்சயம் தனுசுக்கு மிகப்பெரிய படமாக ராயன் திரைப்படம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் நடித்த அந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் சொதப்பியது. ஆனால் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக கேப்டன் மில்லர் திரைப்படம் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மில்லர் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட தவறிவிட்டனர் என தனுஷ் ரசிகர்கள் குற்றம் சாட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்த பின்னர் தொடர்ந்து தனுஷ் தமிழ் சினிமாவில் சரிவை சந்தித்து வரும் நிலையில், ராயன் திரைப்படம் அந்த நிலைமையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் தர லோக்கலாக உருவாகியுள்ள ராயன் ரம்பல் பாடலில் வரும் ஆங்கில லிரிக்ஸும் மிரட்டி எடுக்கிறது.

Next Story