இதைத்தொடர்ந்து, நடிகர்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இதில், நடிகர் ராகாவா லாரன்ஸ் உட்சபட்சமாக ரூ.3 கோடியை கொடுக்க முன்வந்தார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், தான் பிறந்து வளர்ந்த சென்னை ராயபுரம் தேசியநகர் பகுதியில் உள்ள தினக்கூலி பணிகளுக்கு செல்லும் மக்களுக்கு ரூ.75 லட்சமும் பகிர்ந்து கொடுக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் செய்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அதற்கு நன்றி. அதோடு, சினிமா உதவி இயக்குனர்கள், சண்டை நடிகர்கள் உள்ளிட்ட பலரும் என்னை தொடர்பு கொண்டு நான் அவர்களுக்கும் உதவ வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர். மேலும், பொதுமக்கள் பலரும் கடிதம் மூலமாகவும், வீடியோ மூலமாகவும் எனக்கு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். ஆனால், 3 கோடிக்கு மேல் என்னால் உதவ முடியாது என நினைத்தேன். யாராவது அழைத்தால் நான் பிஸியாக இருக்கிறேன் எனக்கூறி விடுங்கள் என என் உதவியாளர்களிடம் கூறிவிட்டு உறங்க சென்று விட்டேன்.
ஆனால், என்னால் உறங்க முடியவில்லை. மக்களின் கோரிக்கைகள் என்னை தூங்கவிடவில்லை. வரும் போது எதுவும் கொண்டுவரவில்லை. போகும் போதும் எதுவும் எடுத்து செல்லபோவதில்லை. கடவுளிடம் கொடுத்தால் மனிதனிடம் சேராது. ஆனால், மனிதர்கள் கையில் கொடுத்தால் அது கடவுளிடம் சேரும். என்னை சேவை செய்யவே கடவுள் அனுப்பியதாக கருதுகிறேன். எனவே, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வது என முடிவெடுத்துள்ளேன். எனது ஆடிட்டர் மற்றும் நலம் விரும்பிகளிடம் முடிவு செய்து விட்டு நான் மேலும் என்ன செய்யப்போகிறேன் என இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, லாரன்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…