காஞ்சானவ விட 10 மடங்கு! - ராகவா லாரன்சின் ‘துர்கா’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

by adminram |

9810ac24736ca4f590e07511206cf733

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பாடல்களுக்கு ஆடி ரசிகர்களிடம் பிரபலமானவர் ராகவா லாரன்ஸ். முனி என்கிற திரைப்படம் அவரின் திரைப்பயணத்தை மாற்றியது. அப்படத்திற்கு பின் காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்களை நடித்து, இயக்கி குழந்தைகளிடம் கூட பிரபலமானார்.

இந்நிலையில், அடுது துர்கா என்கிற திரைப்படத்தை அவர் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பலரையும் அதிர வைத்துள்ளது. ஏனெனில், மொட்டை தலையும், நீண்ட தாடியும் பார்ப்பதற்கு பயங்கர முனியை போல அவரின் தோற்றம் அமைந்துள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து ‘உங்களின் ஆசிர்வாதம் வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

b927239fab66023664f98595d4865867

Next Story