மீண்டும் இணையும் கதிர் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி....

by adminram |

14c5ebe1738ec792c03c902a90f872a2

மறைந்த நடிகர் முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த உள்ளிட்ட பலரும் நடித்து 1991ம் ஆண்டு வெளியாகி இளசுகளின் இதயத்தை உலுக்கிய திரைப்படம் ‘இதயம்’. இப்படத்தை இயக்கியவர் கதிர். தமிழ் சினிமாவில் காதலை உருகி உருகி எடுத்த ஒரு இயக்குனர். காதல் தேசம், காதலர் தினம் ஆகிய படங்களே அதற்கு சாட்சி.

அவர் கடைசியாக இயக்கிய காதல் வைரஸ் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் அவர் படம் இயக்கவில்லை. அப்படம் வெளியாகி 19 வருடங்கள் ஆகிவிட்டது.

ec5c946d88e499dc18b596029b01198e-3

இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் கிஷோர் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. கதிரின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த காதலர் தினம் மற்றும் காதல் தேசம் ஆகிய 2 படங்களிலுமே பாடல்கள் செம ஹிட். இரண்டு திரைப்படங்களிலும் மிகவும் துள்ளலான இசை அமைந்திருக்கும். கதிரின் கடைசி திரைப்படமான காதல் வைரஸ் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைத்திருந்தார். தற்போது 19 வருடங்கள் கழித்து இருவரும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story