More

ரீவைண்ட்- 125 நாட்கள் ஓடிய ராஜாதி ராஜா படம் ஒரு பார்வை

எண்பதுகளில் இருந்து 90கள் வரை இளையராஜாவின் பாவலர் கிரியேசன்ஸ் பல படங்களை தயாரித்தது. எல்லா நிறுவனமுமே, எல்லா  அந்த நேரத்தில் எந்த நடிகர் இயக்குனர் முன்னணியில் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வாய்ப்பு கொடுப்பார்கள் அப்படியாக இளையராஜாவின் பாவலர் கிரியேசன்ஸ் கொக்கரக்கோ,கீதாஞ்சலி, பொம்மக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருந்தது. இதில் கொக்கரக்கோ பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் மற்ற படங்கள் பாவலர் கிரியேசன்சுக்கு வருமானத்தை கொடுத்தன.

Advertising
Advertising

ரஜினியை வைத்து படம் தயாரிக்க எண்ணிய பாவலர் கிரியேசன்ஸ் அதற்காக சரியான கதைக்கு ஏங்கியது. இசைஞானி இளையராஜாவின் நண்பரும் இசைஞானியின் மதிப்புக்குரியவருமான தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் ரஜினி படத்துக்கு கதை கேட்கப்பட்டது. அந்த நேரத்தில் யதார்த்தமாக பஞ்சு அருணாசலத்தை ஆர்.சுந்தர்ராஜன் சந்தித்துள்ளார்.

அடுத்து ஒரு படம் பாவலர் கிரியேசன்சுக்காக இளையராஜா தயாரிக்கிறார் எஸ்.பி முத்துராமன் டைரக்ட் பண்றார் கதை கிடைக்கல மனதை போட்டு குழப்பினாலும் எந்த கதையும் சிக்கவில்லை என சுந்தராஜனிடம் பஞ்சு அருணாசலம் கூறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் ராஜாதி ராஜா படத்தின் ஒன்லைனை சுந்தர்ராஜன் சொல்ல பஞ்சு அருணாசலத்துக்கு ரொம்ப பிடித்து விட்டது. இதையே படமாக்கலாம் இளையராஜா, எஸ்.பி.எம். ரஜினி எல்லோர்கிட்டயும் இந்த கதையை சொல்றேன் என சொல்லி இருக்கிறார். படத்தின் கதையை கேட்ட ரஜினிகாந்த் இந்த படத்தை சுந்தர்ராஜனே இயக்கட்டுமே என சுந்தர்ராஜனை முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே பயணங்கள் முடிவதில்லை, அம்மன்கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட படங்களின் மூலம் ஒன்றியிருந்த இளையராஜா- சுந்தர்ராஜன் நட்பால் இளையராஜாவும் சுந்தர்ராஜனையே புக் செய்ய உடனே படப்பிடிப்புக்கு கிளம்பி விட்டார்கள்.

ஆரம்பத்தில் எஸ்.பி முத்துராமன் பண்ண வேண்டிய படத்துக்கு நாம டைரக்டரா என யோசித்த சுந்தர்ராஜன் இதனால் எஸ்.பி முத்துராமன் அவர்கள் கோபப்பட போகிறார் என நினைத்து முதலில் தயங்கி இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ஒன்றும் ஆகாது நான் பார்த்துக்கொள்கிறேன் என சுந்தர்ராஜனையே இயக்குனராக உறுதிப்படுத்தியுள்ளனர்.

50 நாட்களில் படப்பிடிப்பை முடித்த சுந்தர்ராஜன் அதிரடியாக மிக வேகமாக படப்பிடிப்பை முடித்துள்ளார். ரஜினி, ராதா, நதியா, ஆனந்தராஜ் மற்றும் பலரானோர் நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக 100 நாட்களை கடந்து ஓடியது.

4 மார்ச் 1989ம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி 5 மாதம் கழித்து 6.8.1989ல் இப்படத்தின் 125 வது விழா பிளாட்டினம் டிஸ்க் விழா நடைபெற்றது. அப்போதைய முதல்வர் கலைஞர் கலந்து கொண்டு இப்படத்தில் பங்காற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

சும்மா காட்டு காட்டுனு காட்டுவேன் இப்ப காட்டுனு வேற சொல்லிட்ட  என விஜய் பட டயலாக் போல மற்றவர்கள் படத்துக்கே மியூசிக்கில் அசத்தும் இசைஞானி தன் படம் என்றால் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுக்காமல் இருப்பாரா? மீனம்மா மீனம்மா, மலையாள கரையோரம், மாமா உன் பொண்ண கொடு, வா வா மஞ்சள் மலரே, உலக வாழ்க்கையே, ஆத்துக்குள்ள அத்திமரம், என் கிட்ட மோதாதே போன்ற பாடல்கள் செம ஹிட் ஆகின பட்டி தொட்டி சிட்டியெங்கும் முட்டி மோதி இப்படத்தின் பாடல்கள் ஒலித்தன.இவ்வளவு பாடல்கள் இருந்தாலும் உன் நெஞ்ச தொட்டு சொல்லு என்ற பாடலும் படத்தின் நீளம் காரணமாக படத்தின் ஆடியோவில் மட்டும் சேர்க்கப்பட்டிருந்தது படத்தில் வரவில்லை.

ரஜினியின் சிறந்த ஸ்டைல் படங்களில் இதுவும் ஒன்று . ரஜினியின் மாஸ் லுக் ஸ்டைலான கெட் அப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ரஜினியுடன் சேர்ந்து இப்படத்தில் ஜனகராஜ் காமெடி செய்திருந்தார். படத்தின் திருப்புமுனைக்கும் ஜனகராஜின் கதாபாத்திரமே காரணமாக இருக்கும்.

ரஜினி பட்டணத்து பணக்கார வாலிபராகவும் கிராமத்து சின்ராசாகவும் இரட்டை வேடத்தில் மிரட்டி இருந்தார், கிராமத்து சின்ராசு கெட் அப்பில் அப்பாவியாக யதார்த்தமாக நடித்திருந்தார் ரஜினி. அப்பாவி சின்ராசை காப்பாற்ற இறுதியில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு மற்றொரு ரஜினி வரும் காட்சியை தியேட்டரில் ரசிகர்கள் கை தட்டி ரசித்தனர்.

ராதாரவி, ஒய் விஜயா, வசந்த் உள்ளிட்டோர் வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தனர். ரஜினியின் அப்பா கெட் அப்பில் கெளரவ வேடத்தில் விஜயகுமார் நடித்திருந்தார். ஒருவர் வாழும் ஆலயம் படம் மூலம் அறிமுகமாகி இருந்த நடிகர் ஆனந்தராj  இந்த படத்தின் மூலமே ஆனந்தராஜ் வெளியில் தெரிந்தார்.

எண்பதுகளின் இனிய நினைவுகளில் ராஜாதி ராஜா படத்திற்கு என்றும் இடமுண்டு. இன்றும் டிவியில் போட்டாலும் கண் இமை மூடாமல் பார்த்து ரசிக்க கூடிய இனிமையான அருமையான படம்தான் இந்த ராஜாதி ராஜா.

Published by
adminram

Recent Posts