2021ல் அதிமுக இரண்டாக உடையும்… ரஜினியை பாராட்டும் ராஜேந்திர பாலாஜி (வீடியோ)

துக்ளக் விழாவில் பெரியார் பற்றி சமீபத்தில் ரஜினி தெரிவித்த சில கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து திமுக, திக உள்ளிட்ட கட்சிகள் ரஜினிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தன. சமூக வலைத்தளங்களிலும் பலரும் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுக தரப்பிலும் ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அமைச்சர் ரஜேந்திரபாலாஜி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ‘ அவர் ஒரு கருத்து சொன்னார். நாடே அதிருதில்ல..  அவருக்குன்னு ஒரு மாஸ் இருக்கு.. மவுசு இருக்கு.. 70 வயசுல அவர் நடிச்சா ரூ.500 கோடிக்கு வியாபாரம் ஆகுது. யாரால இது முடியும்?’ என ரஜினியை உயர்த்தி பேசினார்.

இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் இவர் பேசுவதை பார்த்தால் 2021ல் அதிமுக இரண்டாக உடையும் என பதிவிட்டு வருகின்றனர். அதே நேரம், சிறந்த அரசியல்வாதி ராஜேந்திர பாலாஜிதான் எனக்கூறி வருகின்றனர்.

Published by
adminram