ரஜினி, தனுஷை அடுத்து சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?

Published on: January 18, 2020
---Advertisement---

a7d1b6fbcba9be344d5a72fc5e4b40a9

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 168’ படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் 44வது படத்தையும் தயாரிக்க உள்ளது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் ரஜினி, தனுஷ் படத்தை அடுத்து சுந்தர் சி இயக்கும் ’அரண்மனை 3’ என்ற படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஆர்யா மற்றும் சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, ராஷிகன்னா, விவேக், உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 

இசையமைப்பாளர் சத்யா இசையமைக்கும் இந்த படம் அரண்மனை 1, 2 ஆகிய படங்களின் தொடர்ச்சி என்றும் முந்தைய படங்கள் இப்போவே இந்தப்படமும் த்ரில் மற்றும் காமெடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே காஞ்சனா படத்தின் மூன்று பாகங்கள் வெளிவந்த நிலையில் தமிழில் வெளிவரும் அடுத்த மூன்றாம் பாகம் திரைப்படம் ’அரண்மனை 3’ என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment